மதுரா

மதுரா, சின்மயன், வைஷ்ணவி பதிப்பகம், சென்னை, பக். 332, விலை 200ரூ.

கராத்தே உடலையும் உள்ளத்தையும் தூண்மைப்படுத்தும் உத்தமமான கலை என்பதை இந்தக் கதையின் கதாநாயகன் கண்ணன் என்ற கதாபாத்திரம் மூலம் அற்புதமாக விவரித்துள்ளார் நூலாசிரியர். நாட்டியத் தாரகை மதுரா, கராத்தே வீரர் கண்ணன் இடையே உருவாகும் நட்பை, காமம் கலக்காத காதலுடன்… மிகவும் கண்ணியமான முறையில் நகர்த்தும் விதம் சிறப்பு. மதுராவுக்கு பரத நாட்டியம் பெரும் புகழை ஈட்டித் தரும் அதே வேளையில், ஆபத்தையும் அதே அளவுக்கு வாரி வழங்குகிறது. மதுராவை வில்லன்கள் தனி அறையில் அடைத்து வைக்கும்போது கொஞ்சம்கூட பயமில்லாமல் துணிச்சலுடன் எதிர்கொண்டு அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் மதுரா தன்னந்தனியாக அசுரபலத்துடன் கொலை செய்வது… கதையின் விறுவிறுப்பை உச்சம் தொட வைக்கிறது. இந்த கொலை வழக்கில் இருந்து மதுராவை விடுவிக்க கண்ணன் தனது நண்பர்களுடன் மேற்கொள்ளும் தந்திரங்களை தனக்கே உரிய பாணியில் சின்மயன் சட்ட நுணுக்கங்களுடன் அழகுபட விவரித்திருக்கிறார். நம் மனதில் ஆயிரம் வாட்ஸ் ஆச்சரியங்களை குற்றாலசி சாரலாய் அள்ளித் தெளிக்கும் நாவல்.‘ நன்றி: தினமணி, 22/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *