மனசே மருந்து

மனசே மருந்து (மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம்-ஹிப்னோதெரபி, டாக்டர் வேத மாலிகா, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை 17, பக். 240, விலை 150ரூ.

நம் மனதுக்கும், உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை உணர்த்தும் வகையில் உடல் நலத்துக்கு மனசே மருந்து என்கிறது இந்நூல். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர யுகத்தில், போதிய ஓய்வின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என டென்ஷனாகிறோம். டென்ஷனைக் குறைக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். மனநோய்க்கு தொடர்ந்து தரப்படும் மருந்துகளே நரம்பு தளர்ச்சி போன்ற பல புதிய நோய்கள் தோன்றக் காரணமாக அமைகின்றன. மனநோய்களை மருந்தின்றி, அதன் கொடுமைகளை மிகவும் கடுமையான பக்க விளைவுகள் இன்றி தீர்க்கக்கூடிய ஹிப்னாடிச மருத்துவம் எனும் ஹிப்னோதெரபி குறித்து விரிவாக விவரிக்கிறது இந்நூல். மருந்தில்லா மருத்துவம் எனப்படும் ஹிப்னோதெரபி சிகிச்சை முறைக்கும், மனவசியம் எனப்படும் ஹிப்னாடிசத்துக்கும் உள்ள வேறுபாடு, மனநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், வெளிப்பாடுகள், மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள், ஹிப்னோதெரபியின் வகைகள், ஹிப்னோ தெரபி சிகிச்சையின் மூலம் மனநோயில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்கள் என மனநோய் பற்றியும் ஹிப்னோதெரபி குறித்தும் இந்நூல் விரிவாக விவரிக்கிறது. பள்ளிப்பருவ குழந்தைகள்கூட தங்கள் வாழ்வை சில சமயம் டென்ஷனாக உணரும் இன்றைய நவீன யுகத்தில், நம் அனைவரின் வீட்டிலும் இப்புத்தகம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் அது மிகையாகாது. நன்றி: தினமணி, 30/12/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *