இப்படிக்கு அன்புடன் – ஆனந்தியின் கடிதங்கள்
இப்படிக்கு அன்புடன் (ஆனந்தி கடிதங்கள், தொகுப்பாசிரியர் சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், பக். 422, விலை 300ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024686.html அமரர் கல்கியின் புதல்வி ஆனந்தி ராமசந்திரன் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த கடிதங்களின் தொகுப்பு. தாயார் ருக்மணி அம்மாள், குஞ்சக்கா என்று பிரயமுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்., சதாசிவம், கணவர் ராமசந்திரன், உறவினர்கள், இளைய தலைமுறையினருக்கும் பிறருக்கும் ஆனந்தி எழுதிய கடிதங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதியிருப்பது இந்நூலைப் பயண இலக்கியமாகவும் மிளிர வழி வகுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக விற்பனையாகும் அரிய அஞ்சலட்டையில் அவர் எழுதியுள்ள சிறு சிறு தகவல்கள்கூட மிகவும் மதிப்புடையது. தொகுப்பாசிரியருக்கு ஆனந்தி எழுதிய ஒரு கடிதமும் நூலில் இடம்பெற்றுள்ளது. பயணங்கள், ஆன்மிக நெகிழ்வுகள், குடும்ப இனிமைகள் என எல்லாவற்றையும் எத்தனை பேரால் சினேகமாக, சுவையாகக் கடிதமாக எழுத முடியும்? அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார் ஆனந்தி என்றால், அது மிகையில்லை. நன்றி: தினமணி, 6/7/2015.