கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள்
கவி கா.மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள், தொகுப்பாசிரியர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ.
புகழ்பெற்ற கவிஞர்களின் திரையிசைப் பாடல்களை ஆண்டு வரிசைப்படி தொடர்ந்து தொகுத்துவரும் தொகுப்பாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து இம்முறை தொகுத்தளித்திருக்கும் நூல் கவி கா. மு. ஷெரீப் திரை இசைப்பாடல்கள். கவி. கா. மு. ஷெரீப் 1949 முதல் 1963 வரை 14 ஆண்டுகளில் 30 படங்களில் 90 பாடல்கள் எழுதியுள்ளார். கா. மு. ஷெரீப்பின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும், சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? முதலிய கவிஞரின் பிரபலமான பாடல்கள் இடம்பெற்ற படங்கள், படம் வெளிவந்த ஆண்டு, படத்தை இயக்கிய இயக்குநர், பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர், பின்னணி பாடியவர்கள் போன்ற எல்லா விவரங்களையும் இந்நூலிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. படங்கள், பாடல்கள் அகரவரிசை பட்டியலும் உண்டு. திரையிசை ரசிகர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி, 24/2/2015.