சொற்கள்

சொற்கள், ழாக் ப்ரெவெர், க்ரியா பதிப்பகம், புதிய எண் 2, பழைய எண் 25, முதல்தளம், 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை – 41. விலை ரூ. 110 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-5.html

கவிஞர்களின் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் கவிதை மொழியையே மாற்றி அமைக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். பிரெஞ்சு கவிஞரான ழாக் ப்ரெவெர் அப்படிப்பட்ட ஒரு கவிஞர்தான். தமிழில் ழாக் ப்ரெவெரின் கவிதைகள் வெளிவந்தபோது இளம் கவிஞர்களிடையே அது ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. பளிங்கு போன்ற ஒளிரும் சொற்களால் வாழ்வின் ஆழம் காண முடியாத உணர்ச்சிகளை, அதன் இருண்ட பக்கங்களை எழுதிச்செல்லும் அவரது கவிதைமொழி பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இருண்மையும் வெறுமையும் சூழ்ந்த வறண்ட மொழியோடு போராடிக் கொண்டிருந்த பல இளம் கவிஞர்களுக்கு கவிதையின் புதிய வெளிச்சத்தை அது காட்டியது. மிக எளிமையாகத் தோன்றும் சொற்களினூடே ஒரு மிக நீண்ட தூரத்தை இந்தக் கவிதைகள் வெகு சுலபமாகக் கடந்து செல்கின்றன. இலையுதிர் காலம் நிழற்சாலையொன்றின் மத்தியில் துவண்டு விழுகிறது குதிரை அதன்மேல் விழுகின்றன இலைகள் நடுங்குகிறது நம் காதல் சூரியனும் கூட.   நன்றி: குங்குமம் 17-12-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *