பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக். 264, விலை 140ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022419.html இன்றைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியும் அவர்களது சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு உதவும் நூல். குழந்தைகளின் மனதில் எப்போதும் முன்னோர்களைப் பற்றிய தாழ்வான எண்ணங்களை விதைத்துக்கொண்டே இருந்தால், அவர்கள் தங்கள் முன்னோர்களின் மீது மரியாதை இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, தாங்களும் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதற்கான முயற்சிதான் இந்த நூல். அணு விஞ்ஞானம், ஆயுர்வேதம், ஆயுர்வேதத்தில் அறுவைச் சிகிச்சை, சித்த மருத்துவம், இயற்பியல் ரசாயனம், உலோகவியல், கணிதவியல், கப்பற்கலை, விமான இயல், நீர்ப்பாசனத் துறை, நெசவுக்கலை, போர் ஆயுதங்கள் ஆகியவற்றில் எல்லாம் நம்நாட்டில் நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. எண்ணற்ற துறைகளில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதை எல்லாம் எடுத்துக்காட்டும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 6/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *