மாண்புமிகு முதலமைச்சர்
மாண்புமிகு முதலமைச்சர், கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் பெரியபுராணத்தை கதையாக பாடிய சேக்கிழார். அவரது வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் படைக்கப்பட்ட புதினம் இது. சரித்திரப் புதினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும். புதினத்தைப் படைப்பதற்காகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நிலவிய சமூகச் சூழ்நிலை, கலாச்சாரச் செழிப்பு, பழக்க வழக்கங்கள் இவை பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வேண்டும. இவை அனைத்தோடு, வீரம், காதல், போர்க்களத்தந்திரங்கள் இவற்றைப் பொருத்தமாகவும், அளவோடும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக வாசகர்கள் மனதில் ஆவலைத் தூண்டுகிற வகையில் கதையை ஒழுங்குபடுத்துவதோடு, நடையில் ஒரு கம்பீரமும், சுவையும் கையாளப்பட வேண்டும். இத்தனை அம்சங்களையும் கொண்டதாக அருமையான பாத்திரப் படைப்புடன் உயர்ந்த உத்தியில் உரையாடற் பாங்குடன் இந்த சதித்திர புதினத்தை படைத்திருக்கிறார் இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.
—-
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி, எம்.என். சுந்தர், அகில பாரதுய க்ராஹக் பஞ்சாயத்து, விலை 20ரூ.
நுகர்வோர்களின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு அளிப்பதுடன அவர்களுக்கான வழியைகாட்டவும் செய்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.