23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள்

23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ.

சூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 கிரகங்களும், மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்பலன்கள்தான் நடக்கும். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமது முன்னோர்கள், தோஷ நிவர்த்தி தரும் ஆலயங்கள், பரிகார முறைகளை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருமணத் தடை, குழந்தைப் பேரின்மை, நவகிரகத்தால்ஏற்படுகின்ற தோஷம், கால சர்ப்ப தோஷம் என தோஷங்களால் ஏற்படும் தடைகளுக்கு எந்தெந்த தலங்களை வழிபடலாம் என்று இந்த நூலில் செந்தூர் திருமாலன் விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார்.

பல தலங்களுக்குச் சென்று கள ஆய்வின் மூலமாகவும், ஓலைச்சுவடி மூலமாகவும் பல மேற்கோள்களைக் காட்டி செம்மையாகச் செய்துள்ளார். அந்த ஆலயங்களுக்குச் செல்லும் வழி. நடை திறந்திருக்கும் நேரம் போன்றவைகளையும் குறிப்பிட்டு இருப்பது கூடுதல் சிறப்பாகும். உங்கள் ஊர் தினத்தந்தி அலுவலகங்கள் மற்றும் தினத்தந்தி ஏஜென்டுகளிடம் புத்தகங்கள் கிடைக்கும்.

நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *