மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.

மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர், கே.பி. ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம் – ஆர். கோவிந்தராஜ், வெளியீடு- விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2, விலை 110ரூ.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் கலை, அரசியல் மற்றும் வெகுமக்கள் கலாச்சாரத்தில் இன்னும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாகும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் தமிழ் நினைவில் அவர் அழிக்க முடியாத புராணிக கதாபாத்திரமாக நீடிக்கிறார். அவரது வள்ளல் தன்மை, மனிதாபிமானம், மக்கள் ஈர்ப்பு, அரசியல், சினிமா என சகல பரிமாணங்களிலும் நு¡ல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் சொல்லி எழுதப்பட்டுள்ள இந்நு¡லை விகடன் வெளியிட்டுள்ளது. அவரின் சினிமா, அரசியல் பயணத்தின் சுவடுகளைத் தெரிவிக்கும் முக்கியமான புகைப்படங்களும் நல்லமுறையில் அச்சிடப்பட்டிருப்பது இந்நு¡லை ஓர் ஆவணமாக மாற்றுகிறது. நன்றி: தி சன்டே இந்தியன், செப்டம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *