வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர்
வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர், புலவர் ம. அய்யாசாமி, திருக்குறள் பதிப்பகம், பக்கங்கள் 336, விலை 225 ரூ.
சென்னை சென்ட்ரலைத் தாண்டிப் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது வலப்பக்கத்தில் ரிப்பன் மாளிகை, அனைவரது கண்ணையும் கவரும். சென்னை மாநகராட்சிக் கட்டம் என, இன்று சிறப்பிக்கப்படும் இந்தக் கட்டடத்தின் முகப்பில் அமைந்திருக்கும் சிலைதான் பிட்டி தியாகராயர். எப்போதும் வெள்ளை ஆடை அணிந்ததால், ‘வெள்ளுடைவேந்தர்’ என்று போற்றப்பட்டவர். எனவே, அவரது சிலையும் வெள்ளை நிறத்திலேயே அமைந்துள்ளது. ராவ் பகதூர், திவான் பகதூர், சர் முதலான பட்டங்களை ஆங்கிலேயரிடம் பெற்ற இவர், நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து, பல்வேறு சாதனைகளைப் புரிந்து, மறைந்த பிட்டி. தியாகராயரின் வாழ்க்கை வரலாற்றினைப் பல ஆதாரங்களுடன் இந்த நூல் தெரிவிக்கின்றனது. – முகிலை ராசபாண்டியன் நன்றி: 26-ஆகஸ்ட்-2012