சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை – 90. விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html

சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்குவெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில வாரங்கள் வெகுஜன ஊடகங்களுக்கு பெரும் தீனியாக மாறின. அந்த விவாதங்களைத் தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவர் விமலாதித்த மாமல்லன். இணைய ஆபாசம் என்ற எளிய புள்ளியில் தொடங்கிய இந்த சர்ச்சை, தமிழ் தேசிய அரசியல், சாதிய அரசியல் என விரிவடைந்த விதத்தை இந்த நூல் சுவாரசியமாகத் தொகுக்கிறது. சமூக வலைத்தளத்தில் நடந்த ஒரு விவாதம் இவ்வாறு தொகுக்கப்படுவது இதுவே முதல் முறை என்ற வகையில் மாமல்லன் ஒரு முன்னோடியின் இடத்தைப் பெறுகிறார். விரைவில் இதுபோன்ற பல தொகுப்பு நூல்கள் வர வாய்ப்பிருக்கிறது. நன்றி: குங்குமம் 04-02-2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *