நீதிமன்றங்களில் தமிழ்
நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி. ஆர். எஸ். சம்பத், சட்டக் கதிர் பதிப்பகம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, பக்கங்கள் 284, விலை 400ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-9.html உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்கவேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும், தமிழக நீதிமுறையும், நீதிமன்றங்களில் தமிழும் என்னும் பிரிவில் 12 கட்டுரைகளும், பல்வேறு தமிழறிஞர்கள், நீதிபதிகள் எழுதியவைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 348 (2) பிரிவின்படியும், அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 7வது பிரிவின்படியும், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைகள் தமிழில் அறிமுகப்படுத்தும் வகையில் 6.12.2006ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் அது, ஆறு ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சட்டக் கதிரில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும், தமிழை வழக்காடு மொழியாக ஏற்க வேண்டும் என்ற கருத்து, ஒருமனதாக ஆதரித்துள்ளன. அதற்கான வழிவகைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்றும், கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிடலாம் என, ஒரு சில நீதிபதிகள் அனுமதித்து, அவ்வாறு வாதிட்டு உள்ளனர். எனினும் சமீபத்தில் ஒரு நீதிபதி தமிழில் வாதாட தடை விதித்தார். மத்திய அரசை வற்புறுத்த யாருக்கும் தைரியமில்லை என்பதை இது காட்டுகிறது. எனினும், ஆசிரியரின் தொடர் முயற்சிகள் என்றாவது ஒருநாள் வெற்றியடையும் என்று நம்புவோம். -பின்னலூரான். நன்றி – தினமலர், 17 பிப்ரவரி 2013.