ஸ்டார் சமையல்
ஸ்டார் சமையல், தொகுப்பு – தேனி கண்ணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை -10, பக்கங்கள் 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-021-1.html
நளன் காலம்தொட்டு இன்றைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப் வரை ஆண்கள் சமையல் கலையில் கோலோச்சினாலும், பெண்களின் கைப்பக்குவத்தில் தயாராகும் சமையலுக்கு ருசியே தனிதான். அதுவும் நம் நடிகைகள் சமைத்தால் அதன் ருசி இன்னும் கூடும்தானே. நடிகைகள் பலரை சமைக்கச்சொல்லி, அதன் செய்முறைகளை குமுதம் இதழில் வாரந்தோறும் வெளியிட்டார்கள். தொடர் வந்து கொண்டிருந்தபோது, பல்லாயிரம் வாசகர்கள் அந்த எளிய செய்முறைகளை செய்து பார்த்து பாராட்டினார்கள். அவற்றின் தொகுப்பே ஸ்டார் சமையல் என்ற இந்நூல். நடிகைகளுக்கு சமைக்கத் தெரியாது என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்நூல். குமுதம் வாசகர்களுக்காக நடிகைகள் சைவம் மற்றும் அசைவ உணவுகள் ஒன்றுவிடாமல் சமைத்துக் காட்டியிருப்பது பாராட்டப்படவேண்டியது. நன்றி – குமுதம், 27 பிப்ரவரி 2013.