திருக்கோளூர் ரகசியங்கள்

திருக்கோளூர் ரகசியங்கள், வ.ந.கோபால தேசிகாசார்யார், அக்ஷரா பப்ளிகேஷன்ஸ், 12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அபார்ட்மென்ட்ஸ், 2வது தெரு, 3வது மெயின் ரோடு, கிழக்கு சி.ஐ.டி.நகர், நந்தனம், சென்னை 35, பக்கங்கள் 506, விலை 395ரூ.

அக்ரூரரின் பாக்கியம் கடவுளில் கலந்தவள், தாயாக வந்த பக்தை, மாண்டவர் மீண்ட அதிசயம், விதுரரின் விருந்தோம்பல், இரண்டு மாலைகளைக் கொடுத்த தொண்டரடிப் பொடியாழ்வார் என திருக்கோளூர் திருத்தலத்தின் பெருமைகளையும் ரகசியங்களையும் அழகுறத் தந்து அசத்தியுள்ளார் நூலாசிரியர்.  

—-

 

சௌபாக்கியமளிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஹநுமத்தாசன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116,டி,பி,கோவில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ், ஸ்ரீராகவேந்திர மடம் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக்கங்கள்96, விலை 60ரூ.

ஸ்ரீசனி பகவானின் சிறப்பு, ஸ்ரீ அனுமனும் ஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ சனீஸ்வர வழிபாடு, அஷ்டோத்திர சத நாமாவளி, ஸ்ரீசனைச்சர சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என ஸ்ரீசனீஸ்வரரின் குணங்களையும், அவர் நமக்கு வாரி வழங்கும் பலன்களையும் தெளிவுறத் தந்துள்ளார் நூலாசிரியர்.  

—-

 

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரி சாலை, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 80, விலை 60ரூ.

இந்து சமயத் தத்துவங்கள், இந்துக்களின் வாழ்வியல் முறைகள், சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள், சிவ வழிபாட்டுத் தலங்கள், உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம் என இந்துக்களின் பெருமைகளையும் புராதனங்களையும் பற்றிப் பேசுகிற நூல் இது. நன்றி: சக்தி விகடன், 08 ஜனவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *