பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்), பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, முதல் தொகுதி 240ரூ, இரண்டாம் தொகுதி 280ரூ, மூன்றாம் தொகுதி 290ரூ, நான்காம் தொகுதி 260ரூ.
தமிழர்களின் உள்ளத்தில் மொழியுணர்வு என்ற விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் பாவேந்தர் பாரதிதாசன், காலத்தால் அழிக்க முடியாத அவரது கவிதைகளை, இளம் தலைமுறையினருக்கு அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே கருதலாம். தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர் என வீராவேசமாக அவர் முழங்கிய பாக்கள், படித்தவர்களின் மனதில் உணர்ச்சிகளை தூண்டின. இந்த புரட்சி கவிஞர், செதுக்கி வைத்துச் சென்ற தமிழ் உணர்வு மிக்க பாடல்களை தொகுத்து, நூல்களாக வெளியிட்டுள்ளனர். 1938 முதல் 1977ம் ஆண்டு வரை புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதைகள், ஆண்டுவாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தமிழ் உணர்வு மிக்க ஒவ்வொருவரின் வீட்டு அலமாரியையும் அலங்கரிக்க வேண்டிய நூல். – ஆ.ரா.
—-
வாழ்வியல் வழிகாட்டி, எ.எஸ்.ஐயர், ஐஸ்வர்யா நிலையம், 127 (58/1) ஆழ்வார் பேட்டை தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, பக்கங்கள் 128, விலை 40ரூ.
மதிப்பும் மரியாதையும் முதல் ஆரோக்கியமான உள்ளம் ஆன்மீகமாகும் முடிய 41 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. பெரியவர், சிறுவர் என வேறுபாடின்றி அனைவரும் படித்து மகிழத் தக்க பயனுள்ள நீதிக்கதைகளை படித்து பயன்பெறலாம். – எஸ். திருமலை
—-
ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும், வி.செந்தில்குமார், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, (பாலஜி கல்யாண மண்டபம் அருகில்), தி.நகர், சென்னை 17, பக்கங்கள் 192, விலை 50ரூ.
ஏ முதல் இசட் வரை உள்ள அனைத்து பழமொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளோடு, கூடுதல் பயனைத் தருவனவாக,மேலோரின் மேற்கோள்களும் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. தொடக்கக்கல்வி முதல் கல்லூரி பயிலும் மாணவர் வரை அனைவருக்கும் பயன்தரக்கூடிய நூல். நன்றி :தினமலர் 25, மார்ச் 2012.