ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர்
ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர், பக். 136, விலை 100ரூ.
சாயி மார்க்கம் தீபாவளி மலரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடைய பேட்டி, இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை நடத்திய அஸ்வமேத யாகம், அஷ்டபதி தந்த ஜெயதேவரின் வாழ்வில் ஸ்ரீமத் நாராயனின் அருளால் நிகழ்ந்த அற்புதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய கட்டுரையில் பல அரிய தகவல்கள் உள்ளன. ஹரித்வார், ரிஷிகேஷ், அயோத்தி, காசி, திரிவேணி சங்கமம் காண விரும்புவோருக்கு பனிமலையும் கங்கை நதியும் கட்டுரை ஒரு வழிகாட்டி ஆகும். சைவத் திருமுறைகளுள் ஒன்றான பதினோராம் திருமுறை பற்றிய கட்டுரையும், பாபா சிலைகள் தயாரிக்கப்படும் ஜெய்ப்பூர் பற்றிய கட்டுரையும் மிகவும் பயனுள்ளவை. சாய் பக்தர்களுக்கு மட்டுமல்லாது ஆன்மிகவாதிகள் அனைவருக்குமானது இந்த ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர். நன்றி: தினமணி, 26/11/2012.
—-
பக்தி ஸுதா, கே. நாராயணன், ராமபக்தாஸ், எஸ் 17 பி, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை 600078, பக். 276, விலை 70ரூ
இந்தத் தொகுப்பு பல ஸ்லோக மலர்களால் தொகுக்கப்பட்ட ஒரு மாலை. இறைவனிடத்தில் நமது மனதை லயிக்கச் செய்ய கோவில் சென்று வழிபட அல்லது இறைவனுடைய திருவுருவப் படங்களை பக்தியுடன் பூஜித்து, பிரார்த்தனை செய்ய இந்த ஸ்லாகங்களின் தொகுப்பு உதவும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 10/11/2013.