சண்முகக் கவசம் தீபாவளி மலர்
சண்முகக் கவசம் தீபாவளி மலர், பக். 104, விலை 50ரூ.
மகாகவி பாரதியின் கற்பக விநாயகர் துதியுடன் மலர் மலர்ந்திருக்கிறது. திருமுருக கிருபானந்தவாரியாரின் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி? என்னும் தேன் விருந்து உண்மையிலேயே நாவையும் மனதையும் விட்டு அகலாத தமிழ் விருந்து. நரகாசுரர்கள் மறுபடியும் வருகிறார்கள் என்கிற தவத்திரு சுவாமி ஒங்காரநந்தாவின் கட்டுரை, சுவாமிமலை நவரத்தின மலை, ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கவி உலகில் கம்பன் இடம், வெ. இறையன்பின் எது ஆன்மிகம்?, பாம்பன் சுவாமிகள் பெற்ற ஞானதேகம், கண்ணங்குடியில் கட்டுண்ட கண்ணன் ஆகியவை ஆன்மிகப் பகுதியை அலங்கரித்து மெருகேற்றியுள்ளன. கலைமாமணி விக்கிரமனின் வராது வந்த மாமணி, வ.உ.சி.யின் பெருமைகளைப் பொழிந்துள்ளது. கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை என அனைத்துப் படைப்புகளும் மலருக்கு மணத்தைப் பரப்பியுள்ளன.
—-
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், பக். 256, விலை 120ரூ.
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் ஆன்மிகமே மேலோங்கி இருக்கிறது. அன்னை சாரதாதேவி, புட்டபர்த்தி சாய் பாபா, சென்னை ஆலயங்கள், தென்கரைத் தலங்கள் என ஏராளமான செய்திகள் இருப்பினும் குறிப்பிடப்பட வேண்டியவை கீதை உபதேசித்த இடம், சீதா தேவியின் வாழ்வும் வாக்கும் ஆகிய கட்டுரைகள். பெரியசாமி தூரன் பற்றிய கட்டுரையிலும் மணிமேகலை காப்பியம் பற்றிய கட்டுரையிலும் பல புதிய தகவல்கள் யோகா எடுத்த பத்மா சுப்பிரமணியத்தின் காந்தி நாட்டியப் படங்கள் நேரில் பார்க்கும் உணர்வைத் தந்தன. கவிதைகள் எதுவும் தேறவில்லை. பூரி ஜெகன்நாதர் ஜெகநாதர் என்று ஆகிவிட்டாலும் கட்டுரை குறிப்பிடும்படி உள்ளது. ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பற்றிய கட்டுரை இசை ரசிகர்களை கவரும். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் பக்தர்கள் மலர். நன்றி: தினமணி, 26/11/2012. வல