ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி
ஸ்ரீராமகிருஷ்ணப் பேரொளி, கல்யாணி வெங்கடராமன், திருமதி கல்யாணி வெங்கடராமன், 21ஈ, நியூடெக் ஐயப்பா என்க்ளேவ், ஸ்ரீ மாதவன் ரோடு, மகாலிங்கபுரம், சென்னை 34, பக். 480, விலை 280ரூ.
இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகா புருஷர்களில் தலைசிறந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் என்று எல்லா மதங்களும் அந்த ஒரே கடவுளைத்தான் அடைய வழிகாட்டுகின்றன. எனவே எந்த மதத்தையும், அதன் நெறிகளைஹயம் நிந்திக்கக்கூடாது. நேசிக்க வேண்டும் என்று சமய நல்லிணக்கத்திற்கு முதன் முதலாக வழிகாட்டியவர். காளிதேவியை நேருக்குநேர் தரிசனம் செய்தவர். இந்த மகானின் நல்லுரைகள் மாக்களை மனிதர்களாகவும், மனிதர்களை மகான்களாகவும் ஆக்கியது. எளிமையும், பாகுபாடற்ற தன்மையும் கொண்ட இந்த மகானைக் குறித்து பல நூல்கள் வெளியானாலும், இந்த நூல் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் விஷயங்களை எடுத்துக் கூறுகிறது. உயர் கல்விக்காக மொழி இலக்கியங்களைப் பயிலத் தொடங்கிய இந்நூலாசிரியர், ஆன்மீக வழி இலக்கியங்களில் பயணித்து, அது குறித்து பல நூல்களை இயற்றியுள்ளார். இந்த நூலில் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றிய வரலாற்று குறிப்புடன், அவரது அருளுரைகள், அவரைப் பற்றி உலக அறிஞர்களின் கருத்துரைகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ராம கிருஷ்ணரின் தீர்வு, ஆன்மீகம் குறித்து பக்தர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்க ஸ்ரீ ராமகிருஷ்ணர் அளித்த விளக்கங்கள், ஸ்ரீராமகிருஷ்ணரின் சித்தாந்தங்களை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன், மடம் ஆகியவை செயல்படும்விதம் என்று 12 அத்தியாயங்களில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெருமைகளை ஆசிரியர் விவரித்துள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 22/1/2014.