காதல் பறவைகள்
காதல் பறவைகள், ரேவதி ரவீந்திரன், வடிவம், திருச்சி, பக். 466.
எழுதுவதற்கு ஒரு விஷயம் தேவை என்று தேடிப்போகிறவர்கள் அதிகம். ஆனால் அந்த விஷயமே இந்த நூலாசிரியரைத் தேடிவந்து எழுதச் சொன்னதுபோல், எல்லாவற்றையும் எழுதித் தள்ளியுள்ளார். படிக்க சுவாரஸ்யமாய் எழுதியதால் அத்தனை விஷயங்களுக்கும் உயிர் இருக்கிறது. குற்றாலம் அருவியில் குளித்ததையும், வீட்டுக்குப் பின்புறம் உள்ள குருவிகளையும், கார்த்திகை விரதத்தையும் எழுதியவர். கமல், சிவசங்கரி என்று கனமான பேட்டிகளையும் தந்துள்ளார். ஸ்ரீப்ரியாவை சமையலில் ஆர்வம் உண்டா என்று கேட்பவர், சுஜாதாவிடம் கம்ப்யூட்டர் பற்றியும் கேட்கிறார். தயக்கமில்லாத எழுத்துக்களின் உலா இந்நூல். நன்றி: குமுதம், 7/5/2014.
—-
மனதோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, பக். 111, விலை 70ரூ.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபலங்கள் அளித்த பேட்டியின் தொகுப்பு இந்நூல். வாலி, மு.மேத்தா போன்ற கவிஞர்களும், வைஜெயந்திமாலா, இயக்குநர் கே. சங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், தென்கச்சி சுவாமிநாதன், ஆச்சார்ய கிருஷ்ணவர்மா, மருத்துவர் மோகன் என்று பல்துறை அறிஞர்களும் தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். படிக்க சுவாரஸ்யம் மிக்கதாய் நூலாசிரியர் எழுதியுள்ளார். நன்றி: குமுதம் 7/5/2014.