தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில்-ஞலன் சுப்பிரமணியன், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html கதை சொல்லும் முறையில் புதிய திசைகள் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. மகோந்தா என்ற நகரம் உருவாவதிலிருந்து அழிவது வரை அதை உண்டாக்கிய குடும்பத்தின் வழிவழியாய் வருகிற மனிதர்களைச் சுற்றிப் போகிறது கதை. ஒரே மூச்சில் படித்து மூடும் வேகம் கொண்டவர்களுக்கல்ல இந்தப் புத்தகம். ஒரு நகரத்தின் பிறப்பு, எழுச்சி, வீழ்ச்சி என்பது எந்தவொரு நாடு, நகரத்தோடு ஒத்துப் போவதால் இந்த புத்தகம் உலகெங்கும் சென்று சேர்ந்துவிட்டது. வரலாற்றின் நுண் அரசியலை சித்தரிப்பதுதான் இதன் பலம் எனவேதான் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல், 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இன்னும் புதிய வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நன்றி: குங்குமம், 7/7/2014.  

—-

தேவதாசியும் மகானும், பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும் காலமும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 175ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-814-3.html கடந்த பத்தாண்டுகளில் தென்னிந்திய இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் அன்றைய காலகட்டத்தின் சமூக நிலைமையும் உணர்ந்து சில நூல்கள் வந்திருக்கின்றன. அதில் தேவதாசியும் மகானும் (The Devadasi and the Saint) மிகவும் குறிப்பிடத்தக்கது. சங்கீத வித்வான்கள் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள். ஆராதனை புரிகிறார்கள். ஆனால் அந்த சங்கீத மகான் வாசித்த குடிலையோ அடக்கம் செய்யப்பட்ட சமாதியையோ கவனிக்காமல் விட்டிருந்தார்கள். பெங்களூரு நாகரத்னம்மா தன் சொத்தையெல்லாம் செலவழித்து தியாகய்யாவின் சமாதியை ஒழுங்குபடுத்தி, ஆராதனைக்கும் ஏற்பாடு செய்தார்கள். நாகரத்னம்மாவின் தொண்டுக்கு அஞ்சலி செலுத்துவதாக திரு. வி. ஸ்ரீராம் நூல் எழுதியிருக்கிறார். ஸ்ரீராம் பல துறைகளில் சாதனை புரிந்திருந்தாலும் தென்னிந்திய இசைக் கலைஞர்கள் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் தனித்துக் குறிப்பிடத்தக்கவை. இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. நன்றி: குங்குமம், 30/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *