மகான் ஷைகு சாஅதி
மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம். கனி, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 184, விலை 100ரூ.
இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் இந்த உலகிற்கு ஒளியூட்டியுள்ளனர். உதாரணமாக இஸ்லாத்தில் பற்று கொண்ட பக்தாத்தை சார்ந்த முகைதீன் அப்துல்காதல் ஜிலானி, உமர் கய்யாம், இந்தியாவில் புகழ்பெற்ற சூபி ஞானி நிஜாமுதீன் அவுலியா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் ஷைகு சாஅதி 12ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பிறந்த ஒப்பற்ற நீதி அறிஞர், கவிஞரான அவர் கஜல் கவிதைகளில் உள்ள உணர்ச்சி பிரவாகத்தை விட நீதி வழங்குவதில் தொலைநோக்கு சிந்தனையாளராகவும், நீதி உணர்வு மிக்கவராகவும் திகழ்ந்திருக்கிறார். ஒரு பக்கீர் நூறு தவறுகள் செய்தாலும அவரோடு இருப்பவர்கள் அதனைக் கவனிப்பதில்லை. ஆனால் ஒர் அரசன் முட்டாள்தனமான வார்த்தை ஒன்றைச் சொன்ன அடுத்த கணமே அது பிற நாடுகளில் எதிரொலிக்கும் என்கிறார். ஓர் உண்மையைச் சொல்லிவிட்டு கஷ்டப்படுவது ஒரு பொய்யினைச் சொல்லிவிட்டு விடுதலை பெறுவதைவிட மேலானது போன்ற உன்னதமான கருத்துக்களை சாஅதி குலிஸ்தான், போஸ்தான் ஆகிய நூல்களில் பதிவு செய்திருக்கிறார். மேற்கண்ட இரு புத்தகங்களின் தாத்பரியங்களை அழகு தமிழில் மொழிபெயர்த்து தந்திருக்கிறார் நூல் ஆசிரியர். நன்றி: தினமணி, 28/9/2014.