அடையாளங்கள்

அடையாளங்கள், சேது, தமிழில் குறிஞ்சிவேலன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 496, விலை 290ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-6.html இரண்டு கனவுகளுக்கு நடுவே விரிகிறது நாவல். நீது கனவு காண்கிறாள். அதில் அவளுடைய அம்மா பிரியம்வதா நீண்ட மணற்பரப்பில் ஒரு குன்றின் அருகே தனியாக அமர்ந்து தியானத்தில் இருக்கிறாள். தன்னைத் தேடி கண்டடையும் மகளிடம், தன் தியானத்தை கலைக்க வேண்டாம் போய்விடு என்கிறாள். நாவலின் இறுதியில் ஒரு பனிப்பரப்பில் அவள் தியானம் தொடர்கிறது. பிரியம்வதா ஒரு தனியார் சிமென்ட் நிறுவனத்தில் மனிதவளத் துறை அதிகாரி. தன் தொழிலில் அவள் வெற்றிகரமானவள். ஆனால் தனிப்பட்ட தன் வாழ்க்கையில் அவள் தான் தோற்றுவிட்டதாக நினைக்கிறாள். கணவனைப் பிரிந்து தன் மகளுடன் தனித்து வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவள். ஆனால் மகளுக்கும் அவளுக்கும் இடைவெளி விழுந்துகொண்டே போகிறது, மகளின் இரக்கமற்ற சாடுதலில் பிரியம்வதா நோயாளியாகிவிடுகிறாள். ஒரு கட்டத்தில் மகளும் தோல்வியின் கனம் தாங்காமல் அவளுடைய மடியில் வந்து விழுந்து விடுகிறாள். அது அவள் வேதனையை இன்னும் அதிகப்படுத்தி வேலை, தன் சொந்த அடுக்குமாடிக் குடியிருப்பு எல்லாவற்றையும் விட்டு விட்டு தன் கிராமத்துக்குச் செல்லும் மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. மகளின் ஆழ்மனதில் அவள் ஒரு தனிமைப்பட்ட ஜீவியாக மாறிவிடுகிறாள். அதுவே கனவாகி மகளைத் துரத்துகிறது. சேதுக்கே உரிய கனவு போர்த்திய கதை சொல்லலில் வசீகரமான இடத்தைப் பிடிக்கிறது அடையாளங்கள். நாவலை அதன் ஆழத்துக்குக் கொண்டுபோகும் விதமாக மொழிபெயர்த்திருக்கிறார் குறிஞ்சிவேலன். நன்றி: தினமணி, 25/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *