வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல்
வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல், திருமலர் எம்.எம். மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், சென்னை, பக்.152, விலை 110ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-4.html தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றிலும், பண்பாட்டிலும் தனித்துவத்துடன் விளங்குவதும், இன்னும் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப்பாடல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப் பாடல் ஆய்வு நூலாக நூலாசிரியரின் விளக்கத்துடன் வெளிவந்துள்ளது இந்நூல். பொதுவாக இந்த நாட்டுப்புறப் பாடல்கள் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நபிகள் நாயகத்தின் அருமைப் பெயரர்களை அடிப்படையாகக் கொண்ட கர்பலா யுத்தத்தைக் கொண்டும் அமைந்துள்ளது. இதில் காசீம்படைப்போர், கான்சாகிபு சண்டை, தம்பிமார் கதை என ஒன்பது நாட்டுப்புறக் கதைப்பாடல்களுக்கு அழகாகவும், தெளிவாகவும் நூலாசிரியர் உரை எழுதியுள்ளார். நூலில் உள்ள கதைப்பாடலின் மையக்கருத்து வீரம் என்பதே ஆகும். கான்சாகிபு சண்டை என்ற கதைப்பாடல் விளக்கத்தில் முஸ்லிம் என்ற காரணத்தால் மட்டுமின்றி பிரெஞ்சக்காரர்களால், ஆங்கிலேயரால் வளர்க்கப்பட்டதும் – சாகிபு – எனும் அடைமொழி வந்ததையும், கான்சாபின் மனைவி மாசா வரலாற்றில் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ பெண் என்றும், கதைப்பாடலில் அவர் ஒரு தலித் பெண்ணாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. நன்றி: தினமணி, 10/11/2014.