சிந்திப்போமா
சிந்திப்போமா?, தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-9.html இந்நூலாசிரியர் க.ப.அறவாணன் வேறு வேறு இதழ்களில் வேறு வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளையும், வானொலிக்காக எழுதிய உரைகளையும் தொகுத்தளித்துள்ளார். இவை அரசியல், சமுதாயம், வரலாறு, கல்வி, இலக்கியம் தொடர்பானவை. இப்படைப்புகளில் சமுதாயக் கவலையும், அக்கறையுமே மேலோங்கி இருக்கின்றன. பல நாடுகளை சுற்றுப்பார்த்த அனுபவங்களையும், கற்ற நூல்களையும் அடியொற்றி எழுதும் கருத்துக்கள் நிகழ்கால அரசியலுக்குப் பயன்பட வேண்டும். இயலுகிறவரை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதுதான் ஒரு சமுதாயம் உரை வழியாக அமையும். அதற்காக சிந்திப்போமோ என்கிறார் நூலாசிரியர் முனைவர் க.ப.அறவாணன். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.
—-
அதிரப்படை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
திரைப்பட ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான விஜய் மில்டன், தந்தையும் எழுத்தாளருமான எஸ். விஜயராஜிடம் ஒரு கதை சொல்கிறார். கதை நன்றாக சினிமாவுக்கு ஏற்ற மாதிரி இருந்தது. ஆனால் அது சினிமாவாக எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக, அக்கதையை நாவலாக எழுதிவிட்டார் விஜயராஜ். சினிமாபாணி கதை அல்லவா? விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்கள் ஜீவனுடன் உலா வருகிறார்கள். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.