அறிவியல் முதல்வர்கள்
அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 84, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே, அறிவியல் மீது பெரிய ஈடுபாடு ஏற்படும். அதற்கு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர். இந்த நூலில், குழந்தைகளுக்காக, அறிவியல் அதறிஞர்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளில், முன்னோடிகளாக இருந்த ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, மேகனநாத் சாகா, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்ற மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் சுருக்கமாகவும், எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. வான் இயற்பியலின் தந்தையான மேகனநாத் சாகாவின் மறைக்கப்பட்ட வரலாறு, தமிழில் சுருக்கமாகவேனும் வெளிவருவது இதுவே முதல் முறை. நன்றி: தினமலர், 12/1/2015.
—-
வேர் முளைத்த உலக்கை (கவிதை), பச்சோந்தி, தமிழ் அலை பதிப்பகம், பக். 104, விலை 90ரூ.
மண்ணும் மக்களுமே, பச்சோந்தி கவிதைகளின் ஆன்மா. நகரமயமாக்கலில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட கிராமங்களையும், மனிதர்களையும் பேசும் இவரது கவிதைகள், எளிமையும், நேர்மையும் நிரம்பியவை. பொருளாதாரத் தேவைக்காக, சென்னையில் அல்லாடும், தெற்கத்தி மாவட்டங்களின் மனிதர்களின் ஆன்மா, பெரும்பாலான கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவிகள் நடமாடும் கிராமம், லொக்கு லொக்கு மனிதர்கள், கைகுலுக்கும் கண்ணாடி, வாழையடி வாழையாய், தென்னங்கள்ளை போன்ற கவிதைகள் கவனிக்கத்தக்கவை. நன்றி: தினமலர், 11/1/2015.