பேசாத பேச்செல்லாம்
பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 170ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024596.html இன்றும்கூட ஆணாதிக்கம் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. ஆணாதிக்கத்தின் அடிமைகளாய் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் பெண்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதை நூலாசிரியர் இந்நூலில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லத் துடிக்கும் பெண்கள், அதற்கான வாய்ப்புகளைத் தேடி கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆனால் பெண் என்பதால் அவர்கள் எத்தகைய துன்பங்களை எல்லாம் சந்திக்க நேர்கிறது என்பதை நூலாசிரியர் தனது சுய அனுபவங்களிலிருந்தும், தான் பார்க்க நேர்ந்த பிற பெண்களின் துயரங்களிலிருந்தும் கண்டறிந்து, உணர்ந்து, பதிவு செய்திருக்கிறார். பெண்களின் பரிதாப நிலை வாசகர்களாகிய நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆண்களால் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை குறித்து சொல்ல முயன்றுள்ள நூலாசிரியர், அதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொன்னால், விமர்சனங்களைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சமும், தயக்கமும் அவருக்கு ஒருவேளை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனினும் இன்றையப் பெண்களின் நிலை குறித்த ஒரு சிறப்பான பதிவு இந்நூல் என்றே சொல்லவேண்டும். நன்றி: தினமணி, 3/8/2015.