காலச் சப்பரம்
காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.
—-
நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ.
விண்வெளி, அறிவியல், கல்வி ஆகிய துறைகளில் சாதனை படைத்த இந்தியர்கள் 12 பேரின் வாழ்க்கைக் குறிப்பு, கதைபோல சுவைபடக்கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.
—-
அணைக்க வேண்டிய குடும்ப உறவுகள், வெளியீடு இராஜமாணிக்கம்மாள், சென்னை, விலை 70ரூ.
இந்நூலில் குடும்ப உறவுகள் குறித்து மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் கோமு. கண்ணா. இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஏராளமாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.