தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 327, விலை 260ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024589.html கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தைப் பற்றி பலர் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள், குறிப்புகள் பலவற்றிலிருந்து 140 தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை முதல் நீலகிரி வரை மற்றும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணக் குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தூர தேசப் பிரயாணம் செய்வது அசாத்தியமான காரியம். இப்போது காசி, ராமேஸ்வரத்திற்கு ஏழு நாள்களில் சென்று வந்துவிட முடியும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீராவி இயந்திரம் என்கிற பெயரே இந்தத் தேசத்தில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத காலத்தில் தூர தேசப் பிரயாணம் என்பது எப்படி இருந்திருக்கும் என்பதை புரிய வைக்க முற்படுகிறது இந்நூல். தமிழகத்தின் புராதனமான நகரங்கள், திருக்கோயில்கள், அவற்றின் அன்றைய சிறப்புகள், கோவில் உற்சவங்கள், திருவிழாக்கள், புராதனமான நகரங்களுக்குச் சென்ற சிலருடைய பயணக் குறிப்புகள், அன்றைய நகர வாழ்க்கை பற்றியும், புகை வண்டியைப் பற்றியும் எழுதப்பட்ட சில கவிதைகள், பாடல்கள், ரயில் பயண அனுபவங்கள், அசௌகரியங்கள், ஜட்கா பயணம், டிராம் வண்டிகள் என நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்மை இட்டுச் செல்கிறார் நூலின் தொகுப்பாசிரியர். நமக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் சென்ற நூற்றாண்டின் நிலையை அற்புதமாக விவரிக்கும் இந்த நூல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம். நன்றி: தினமணி, 7/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *