பிருகு சம்ஹிதா
பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400.
இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் எழுதியுள்ள இன்னொரு நூல், “விவாக தீபிகா” இந்த நூலில் திருமண சாஸ்திரங்கள், ஒன்பது கிரக தோஷங்கள் உள்ளிட்ட திருமணம் தொடர்பான அனைத்து செய்திகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 10/2/2016.
—-
சாதனை மகளிர், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 20ரூ.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தங்க மங்கை பி.டி. உஷா, பாட்மிண்டன் வீராங்கனை செய்னா நேவல், ‘‘பெப்சி” நிறுவன தலைவர்களில் ஒருவரான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி உள்பட 12 சாதனைப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 10/2/2016,