தாய்மை

தாய்மை, லக்ஷ்மி, சந்தியா, விலை 140ரூ.

‘லக்ஷ்மி’ என்ற புனை பெயரில் பல அற்புத நாவல்களைப் படைத்த திரிபுரசுந்தரி, ஒரு டாக்டர் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்தார். அவர் எழுதிய “தாய்மை:பூப்படையும் நாள் முதல் பிள்ளைப் பேறு வரை” என்ற மருத்துவ நூல் இப்போது வெளிவந்துள்ளது. இளம் பருவத்தில் இருந்து வயோதிகம் வரை, ஒரு பெண்ணுக்கு தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை இந்த நூலில் விரிவாகக் கூறியுள்ளார், டாக்டர் திரிபுரசுந்தரி. பெண்கள் கையில் இருக்க வேண்டிய கையேடு. நன்றி: தினத்தந்தி, 24/2/2016.  

—-

ஜெகத்ரட்சகன் நூல்கள், ஆழ்வார்கள் ஆய்வுமையம்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் செயலாளர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எழுதிய கீழ்க்கண்ட நூல்களை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தனிப்பாடல் திரட்டில் திருமால் விலை 70ரூ. திருப்புகழில் திருமால் 80ரூ. வைணவ நிகண்டு 50ரூ. சர்வ சமய வாழ்வியல் சிந்தனைகள் 100ரூ. பிரம்ம சூத்திரம் ஒரு பார்வை 170ரூ. நன்றி: தினத்தந்தி, 24/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *