கரப்பான் பூச்சி நகைக்குமோ?
கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபர ஸ்ரீதேவன், கவிதை பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ.
நீதியரசர் பிரபர ஸ்ரீதேவன் நான் நினைத்ததை, நம்புவதை, உணர்ந்ததை, உள்வாங்கியதை, படித்ததை, நேசித்ததை கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். புத்தகத்திற்கு அவர் சூட்டியிருக்கும் ‘கரப்பான் பூச்சி நகைக்குமோ’ என்கிற தலைப்பும், அக்கட்டுரையும் இன்று வெற்றத்தில் மிதக்கும் தமிழகத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. “ஒரு புறம் உணவு எச்சங்கள் குப்பை மலைகளாகக் குவிகின்றன. மறுபுறம் உணவையே பலநாள் பார்த்திராத மக்கள். ஒரு புறம் ஒவ்வொரு விட்டிற்கும் ஒரு நீச்சல் குளம் என்று அசுரவிளம்பரங்கள், மறுபுறம் ‘தண்ணீர் லாரி எப்போது வரும்’ என்று சாதகப் பறவை போலக் காத்து நிற்கும் மக்கள் கூட்டம், ஒருபுறம் காற்றைவிட வேகமாகப் பறக்கும் சொகுசு வண்டிகளின் சக்கரங்களில் சிக்கி மடியும் மக்கள், நாம் அமைதியாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.” தவறுகளைத் தட்டிக்கேட்கத் துணிவில்லாமல் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் சராசரித் தமிழனைத் தட்டி எழுப்பி, சமூகத்தில் காணப்படும் களங்கங்களை, சமூதாயத்தில் மண்டிக்கிடக்கும் முறைகேடுகளை ‘எழுத்து’ என்கிற ஆயுதத்தால் எதிர்கொள்வதற்கான ‘தர்மயுத்தம்’ தொடங்கி இருக்கிறார் நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 9/3/2016.