பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், தொகுதி 1, விலை 330ரூ, தொகுதி 2-3 விலை 250ரூ(ஒவ்வொன்றும்).
மறைந்த பேரறிஞர் அண்ணா எழுதிக் குவித்த கதைகளும், கட்டுரைகளும் ஏராளம். அவற்றில் சிறு கட்டுரைகளை தேர்வு செய்து, மூன்று புத்தகங்களாக வெளியிட்டுள்ளது பூம்புகார் பதிப்பகம்.
1937ம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து 1948ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை வரை, இந்நூல்களில் காலவரிசைப்படி இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்கள் பற்றி அண்ணா ஆழமாக ஆராய்ந்து, தமக்கே உரிய பாணியில் காரசாரமாகவும், நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் தமது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எல்லா கட்டுரைகளிலும் அண்ணாவின் முத்திரை ஆழமாகப் பதிந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.