வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம், ஜி. சந்தானம் ஐ.ஏ.எஸ்., நேசம் பதிப்பகம், விலை 175ரூ.

40 ஆண்டு காலம் தமிழக அரசில் எல்லோரும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. சந்தானம் எழுதிய ‘வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்’ என்ற இந்த நூலில், வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் எல்லோரும் சந்தித்ததும், அதே நேரத்தில் சரியாக புரிந்து கொள்ளாததுமான பல விஷயங்களை சுட்டிக்காட்டி உள்ளார்.

‘அரசு அலுவலகம் என்றால் கதவுகளும் காசு கேட்கும், கம்பியும் கை நீட்டும்,’ என்ற சாமானிய மக்கள் சலித்து கொள்கிறார்கள் என்பதையும், ‘தேவை அரசுகளின் இலவச சேவை தான்’ என்று பட்டவர்த்தனமாக கூறியதை படிக்கும்போது, அரசுகள் செயல்பட வேண்டியதையும் சுட்டிக்காட்டி உள்ளார். சமுதாயத்தில் உள்ள நல்லவைகளை வழிகாட்டும் வகையில், இவர் 21 தலைப்புகளில் கூறி உள்ள கருத்துக்களை படிக்கும்போது வாழ்க்கை என்ற தொடர் ஓட்டத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் ஒளிவிளக்காகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல.

நன்றி: தினத்தந்தி, 30/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *