மூக்கூடல்

மூக்கூடல், வா,மு,சே, ஆண்டவர், சேதுச் செல்வி பதிப்பகம், விலை 150ரூ.

இலக்கணவியல், இலக்கியவியல், அயலகத் தமிழியல் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல், “முக்கூடல்” என்ற பொருத்தமான தலைப்புடன் வெளிவந்துள்ளது. முதல் பகுதியில், தொல்காப்பியர் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.

இரண்டாம் பிரிவான இலக்கியவியலில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார், முனைவர் பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர். அயலகத்தமிழியல் என்ற மூன்றாம் பகுதியில், அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் வளர்ச்சிக்கு எடுத்து வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை விவரிக்கிறார்.

இந்த நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும், தமிழ் ஆய்வாளர்கள் மேலும் ஆய்வு செய்வதற்கு உகந்த கருத்துக் கருவூலங்களாக திகழ்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 30/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *