அங்காடித் தெரு
அங்காடித் தெரு, வசந்தபாலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ.
அங்காடித் தெரு திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினைகளைப் பேசிய படம் ஆகும். தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையைப் பொத்தம் பொதுவாக பேசாமல் வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதலிடம் மட்டுமல்ல, முக்கியமான இடத்தையும் பெற்றது.
அதனால்தான் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த சினிமா வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் திரைக் கதை இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. இயக்குநர் ஜி. வசந்தபாலன் எழுதிய இந்தத் திரைக்கதை மெருகு குறையாமல் அப்படியே புத்தமாக முகிழ்ந்துள்ளது.
இது இதுபோல இன்னும் பல படைப்புகள் வெளிவர உந்துதலாக அமையும் என்பது உறுதி. நல்ல தரமான படைப்பை வாசிக்க நினைப்பவர்களுக்கும், சினிமாவை நேடிசத்து அதன் உள்ளே நுழைய விரும்பும் கதாசிரியர்கள், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நூல் நிச்சயம் மகிழ்சியைக் கொண்டுவரும்.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.