கலாம் என்னும் கலங்கரை விளக்கு

கலாம் என்னும் கலங்கரை விளக்கு, ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், விலை 160ரூ.

ஒப்பற்ற குடியரசு தலைவராக விளங்கி இணையற்ற புகழ் படைத்தவர், அப்துல் கலாம். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தன் எளிமையால், நேர்மையால், இயல்பான மானுடத் தன்மையால் காந்தம்போல ஈர்த்தவர்.

வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து உழைத்தும், போராடியும் இந்தியாவில் உயர்ந்த பதவியாகிய ஜனாதிபதி பதவி என்னும் உச்சம் தொட்டவர். அவரது வாழ்க்கை வரலாற்று குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளுக்கும் பாடப்புத்தகமாக விளங்கக்கூடியது.

எட்டு வயதில் வீடு வீடாகச் செய்தித்தாள் போட்டு குடும்பத்துக்கு உதவிய சிறு வயது நிகழ்ச்சி தொடங்கி அவரது இறுதிக்காலம் வரையிலான அப்துல் கலாம் வரலாற்றை கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ளார். அவருக்கே உரிய தனித்துவமான தமிழ் நடையில், கவி நடையில் சுவையாக கலாம் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துள்ளார். கண்ணைக் கவரும் வண்ணப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 15/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *