இன்றைக்கும் ஆராய்ச்சி மணி
இன்றைக்கும் ஆராய்ச்சி மணி, தி. இராஜகோபாலன், வானதி பதிப்பகம், விலை 120ரூ,
மன்னர்கள் காலத்தில் அடிக்கப்பட்ட ஆராய்ச்சி மணி இன்றைய காலத்திற்கும் அவசியம் என்பதை தனது ஆய்வு கட்டுரைகளில் வலியுறுத்துகிறார் பேராசிரியர் தி. ராஜகோபாலன்.
சிங்கப்பூரை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கு மறைந்த பிரதமல் லீ குவான் இயூ எடுத்துக்கொண்ட கடின முயற்சி, அயராத உழைப்பு இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தாரா? என பாராட்ட வைக்கிறது. பண்பாடு படும்பாடு கட்டுரைகளில் தொழில்நுட்ப துறை இளைஞர்களின் காதலின் முத்தம் குறித்து கடுமையாக சாடியிருக்கிறார்.
இப்படி மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் விதமாக 27 கட்டுரைகளின் தொகுப்பு. தனது திறம்பட்ட மொழிப் புலமையால் ஆராய்ச்சிமணியை பலமாகவே அடித்து இருக்கும் ஆசிரியரை வெகுவாக பாராட்டலாம்.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.