ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6, ஈரோடு தமிழன்பன், தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன், பூம்புகார் பதிப்பகம், பக்.872, விலை ரூ.750. புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண […]

Read more

கலாம் என்னும் கலங்கரை விளக்கு

கலாம் என்னும் கலங்கரை விளக்கு, ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், விலை 160ரூ. ஒப்பற்ற குடியரசு தலைவராக விளங்கி இணையற்ற புகழ் படைத்தவர், அப்துல் கலாம். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தன் எளிமையால், நேர்மையால், இயல்பான மானுடத் தன்மையால் காந்தம்போல ஈர்த்தவர். வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து உழைத்தும், போராடியும் இந்தியாவில் உயர்ந்த பதவியாகிய ஜனாதிபதி பதவி என்னும் உச்சம் தொட்டவர். அவரது வாழ்க்கை வரலாற்று குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளுக்கும் பாடப்புத்தகமாக விளங்கக்கூடியது. எட்டு வயதில் வீடு வீடாகச் […]

Read more

திசை கடக்கும் சிறகுகள்

திசை கடக்கும் சிறகுகள், ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மானுட விடுதலையைப் பிரதானமாகக் கொண்டு கவிதைகளை இயற்றும் கவிஞர், ‘தமிழ்த் தாயே, இப்போது உனக்கென ஒரு நாடு இல்லை, உனக்குத் தெரியுமா?’ என்ற கேள்விகளால் நெஞ்சில் வேள்வி வளர்க்கிறார். சிலர் இறுக்கப் பிடித்து கை குலுக்கினால் அச்சமாக இருக்கிறது. மோதிரங்கள் களவு போகின்றன. போகட்டும், ஆனால் சில நேரங்களில், விரல் ரேகைகளே காணாமற் போய்விடுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மரணங்கள் நேரடிப் […]

Read more