திசை கடக்கும் சிறகுகள்
திசை கடக்கும் சிறகுகள், ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மானுட விடுதலையைப் பிரதானமாகக் கொண்டு கவிதைகளை இயற்றும் கவிஞர், ‘தமிழ்த் தாயே, இப்போது உனக்கென ஒரு நாடு இல்லை, உனக்குத் தெரியுமா?’ என்ற கேள்விகளால் நெஞ்சில் வேள்வி வளர்க்கிறார். சிலர் இறுக்கப் பிடித்து கை குலுக்கினால் அச்சமாக இருக்கிறது. மோதிரங்கள் களவு போகின்றன. போகட்டும், ஆனால் சில நேரங்களில், விரல் ரேகைகளே காணாமற் போய்விடுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மரணங்கள் நேரடிப் போர்களால் நிச்சயம் ஆவதில்லை. ஏவிவிடப்படும் பசி பட்டினி நோய் எல்லாம் போர்கள் போடும் மாறுவேடங்கள் என்பன போன்ற கவிதைகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. நன்றி: தினத்தந்தி.
—-
பொன்வேல் அழகு, பாக்ய பாரதி, எஸ்.லட்சுமணன் வெளியீடு, சென்னை, விலை 25ரூ.
அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவில் முருகனின் பெருமையை பக்தி பரவசத்துடன் பாடலாக எழுதி தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி.