தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ.
ராஜராஜ சோழனை விட, அதிக வெற்றிகளை குவித்தவன், அவன் மகன் ராஜேந்திர சோழன். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என, பெருமையோடு அழைக்கப்பட்டவனின் வரலாற்றை தெளிவுபட விவரிக்கிறது இந்த நூல். ராஜேந்திர நோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவிலை கட்டிய சிற்பி, குணவன். ஆட்சி நிர்வாகத்திற்காக, தன் நாட்டை, ஒன்பது மண்டலங்களாக பிரித்தார். இலங்கை, மும்முடி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது உள்ளிட்ட, ஏராளமான வரலாற்று தகவல்கள், இந்த நூலில் நிறைந்துள்ளன. வடக்கிருத்தல் முறையிலோ, முதமையின் காரணமாகவோ ராஜேந்திரன் இறந்திருக்கலாம். சோழர் கால கல்வெட்டுகள் முழுமையாக படிக்கப்படவில்லை. அகழ்வு செய்யப்பட வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளன. இவை செயல்படுத்தப்பட்டால், சோழர் சரித்திரத்தின் பல பகுதிகள் வெளிச்சத்திற்கு வரும் என்கிறார் நூலாசிரியர். ராஜேந்திரனின் பெருமைமிகு செயல்பாட்டிற்கு துணை நின்ற, அவன் மகன், ராஜாதி ராஜன் ஆட்சிப் பொறுப்பேற்றதோடு நிறைவு பெறுகிறது நூல். சோழர் வரலாற்று நூல்களில், இதற்கு முக்கிய இடம் உண்டு. -சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 25/10/2015.