தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்
தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோக, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 150ரூ.
பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர்.
டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார்.
நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். காதல் திருமணம் அங்கு அனுமதிக்கப்படுகிறது. பயணக் கட்டுரையாக துவங்கிய நூல், பின் வரலாறாக தடம் மாறுகிறது.
-ஆதித்யா.
நன்றி: தினமலர், 17/7/2016.