கவிதைக்குள் அலையும் மனச்சிறகு
கவிதைக்குள் அலையும் மனச்சிறகு, கவிஞர் க. அம்சப்ரியா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 10ரூ.
கவிஞர் ச. அம்சப்ரியா பல்வேறு இதழ்களில் கவிதை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய சிறுதொகுப்பு. இது 24 பக்கங்கள் கொண்ட கையேடு. ‘கவிதைக்குள் அலையும் மனச்சிறகு’ என்ற பெயரில் பல கவிஞர்களின் கவிதைகள் அர்த்தத்தோடு சிலாகிக்கப்பட்டுள்ளது.
ராஜ சுந்தராஜன் எழுதிய ‘தழும்புகள்’ என்ற தலைப்பில்…
அப்படி ஒரு நிலைமை வரும் என்றால்
அக்கணமே வாழோம் என்றிருந்தோம்
வந்தது
அப்படியும் வாழ்கிறோம்
நம்மோடு நாம் காண
இத்தென்னைகள் தன் மேனி வடுக்கள் தாங்கி…
இது ஒரு சிறு உதாரணம்…
நன்றி: கல்கி, 21/8/2016.