அம்மாவின் கோலம்
அம்மாவின் கோலம், ஜெயதேவன், எழுத்து வெளியீடு, பக். 96, விலை 60ரூ.
மரபின் உள் மூச்சை வாங்கி நவினத்துவ மூக்கில் சுவாசிக்கும் இவரது கவிதைகள், வாசிப்புச் சுகம் மிக்கவை. சமூக அக்கறையும் விசாரிப்பும் கலந்தவை.
“பாக்கெட்டில் சுரட்டி வைக்கப்பட்டுள்ளது வாழ்க்கை
உங்கள் பாக்குத்தூளைப் போல”
-போன்ற வரிகள் இயல்பான அசலான சமூக பிம்பத்தைக் காட்டுகின்றன.
ஒவ்வொரு கதவுக்குள்
திரியும் மிருகத்தின்
முதுகில் குத்தப்பட்டுள்ள
முத்திரை என்னவோ
‘பெண்கள் ஜாக்கிரதை’
-இப்படியான கவிதைகளுடன் வாசகனை ஏமாற்றாத நூல் இது.
நன்றி: கல்கி, 21/8/2016.