தீக்கொன்றை மலரும் பருவம்

தீக்கொன்றை மலரும் பருவம்,  அபுபக்கர் ஆடம் இப்ராஹிம், தமிழில்: லதா அருணாச்சலம், எழுத்து வெளியீடு, விலை: ரூ.499 பழமை தொடரும் சமூகங்கள், பண்பாடுகளின் மைய அச்சாகப் பெண்ணே கருதப்படுகிறாள். பெண்ணின் இயல்பான விழைவுகளையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்திப் பண்பாட்டைக் காக்கும் சமூகத்தின் சின்ன அலகாகக் குடும்பம் திகழ்கிறது. அரசியல் ரீதியான பாதுகாப்பின்மையும் மத அடிப்படையிலான வன்முறைகளும் அன்றாடமாகவுள்ள வடக்கு நைஜீரியாவைப் பின்னணியாகக் கொண்டு அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய நாவல் இது. 55 வயது விதவையான ஹஜியா பிந்தா ஜூபைரு, சமூகமும் குடும்பமும் விதிக்கும் வரம்புகளை […]

Read more

அம்மாவின் கோலம்

அம்மாவின் கோலம், ஜெயதேவன், எழுத்து வெளியீடு, பக். 96, விலை 60ரூ. மரபின் உள் மூச்சை வாங்கி நவினத்துவ மூக்கில் சுவாசிக்கும் இவரது கவிதைகள், வாசிப்புச் சுகம் மிக்கவை. சமூக அக்கறையும் விசாரிப்பும் கலந்தவை. “பாக்கெட்டில் சுரட்டி வைக்கப்பட்டுள்ளது வாழ்க்கை உங்கள் பாக்குத்தூளைப் போல” -போன்ற வரிகள் இயல்பான அசலான சமூக பிம்பத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கதவுக்குள் திரியும் மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள முத்திரை என்னவோ ‘பெண்கள் ஜாக்கிரதை’ -இப்படியான கவிதைகளுடன் வாசகனை ஏமாற்றாத நூல் இது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

வெள்ளையானை,

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, மதுரை, விலை 400ரூ. To buy this Tamil book online: www.nhm.in/shop/100-00-0002-186-7.html ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சம், அந்தப் பஞ்சத்தில் மடிந்துபோய் வரலாற்றில் பதியப்படாத பெரும் தொகையிலான மக்கள், சாதி இந்துக்களால் கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் மக்கள் இந்தச் சம்பவங்களின் பதிவே வெள்ளையானை நாவல். 1921ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மூலம் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தலித்துகள் புறக்கணிக்கிறார்கள். தலித் தலைவர் எம்.சி.ராஜாவின் வேண்டுகோளை ஏற்று, தலித் […]

Read more

வெள்ளையானை

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, மதுரை, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-186-7.html அறியாத வரலாறு எதுவும் செய்துவிட முடியாமல் துயரத்தை மட்டுமே அடைகின்ற ஒரு நிலையை எதிர்கொள்ளும் மிக எளிய மனிதனின் மனவோட்டங்களும் அந்த இக்கட்டான காலகட்டத்தினை கடக்கிற தருணங்களும், சூழ்நிலைகளோடு போராடும் சாதாரண மனிதன் அந்தரங்கமான உரையாடல்களுமாக நீள்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை என்கிற புதிய நாவல். வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாக கொண்டுவரப்படும் ஐஸ் கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தபடுகிறது. […]

Read more