மக்கள் தகவல் தொடர்பியல்
மக்கள் தகவல் தொடர்பியல், பேராசிரியர் ராஜா வரதராஜா, மு. வரதராஜன், ஆரா பதிப்பகம், விலை 150ரூ.
1450-ம் ஆண்டு அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதழ்கள் வாயிலாக தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இதழியலின் தோற்றம், வளர்ச்சி குறித்து இந்த நூல் விவரிக்கிறது. உலக அளவில் முதலில் தோன்றிய நூல்,
இந்தியாவில் முதல் அச்சகம், முதலில் தோன்றிய நூல் மற்றும் தமிழில் முதன் முதலில் அச்சான நூல் என்பது தொடங்கி அனைத்து தகவல்களையும் இந்த நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதழ்களோடு நின்று விடாமல் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி இவற்றின் தோற்றம் மற்றும் வளர்ந்த விதம் பற்றியும் இதன் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் ராஜா வரதராஜா, மு. வரதராஜன் ஆகியோர் ஓர் அழகிய ஆய்வு நூலாக உருவாக்கியுள்ளனர்.
எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் தொகுத்து அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இது ஒரு தகவல் தொடர்பு களஞ்சியம் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது.
நன்றி: தினத்தந்தி, 7.9.2016.