ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள்
ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள், ஆர். ரங்கராஜன், மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ.
திரைப்படங்களில் இனிமையான பாடல்களைப் பாடி, ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர் ஜமுனாராணி. அவர் சினிமாவுக்காகப் பாடிய முதல் பாடலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல்தான், “குளிர் தாமரை மலர்ப் பொய்கை கண்டேன்” என்று தொடங்கும் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் “வளையாபதி” (1952).
சுமார் 40 ஆண்டு காலம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பாடிய ஜமுனா ராணி கடைசியாகப் பாடிய பாடல் 1992-ல் வெளிவந்த “அண்ணன் என்னடா தம்பி என்னடா” படத்தில் இடம் பெற்றது. ஜமுனா ராணி பாடிய ஏறத்தாழ 500 பாடல்களில் 326 பாடல்களை இப்புத்தகத்தில் இடம் பெறச் செய்திருக்கிறார், நூலாசிரியர் ஆர். ரங்கராஜன்.
நன்றி: தினத்தந்தி, 7.9.2016.