அப்துல் கலாம்

அப்துல் கலாம், வரலொட்டி ரங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 280, விலை 200ரூ.

சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை கோர்வையாக, படிக்க அலுப்பு தட்டாத வகையில், 280 பக்கங்களில் விவரித்துள்ளார் வரலொட்டி ரெங்கசாமி.

‘காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என்று ஒரு தலைமுறை பெருமை பேசியது என்றால், ‘நாங்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என, இன்னொரு தலைமுறையை கர்வப்பட வைத்தவர் என குறிப்பிட்டுள்ளார். இதற்காக கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரம், டில்லி உட்பட பல இடங்களுக்கும் சென்று சேகரித்த தகவல்களை ஒன்று விடாமல், அதே நேரத்தில் மாறுபட்ட பரிமாணங்களையும் எளிய நடையில், அனைத்து தரப்பினரும் படிக்கும் வகையில் தந்துள்ளார்.

கலாமிற்கு கார் ஓட்டிய கதிரேசன் அவரது தூண்டுதலால் படித்து முனைவர் பட்டம் பெற்றது, உடல் நலம் குன்றிய குஷ்வந்த் சிங்கை, ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவரது வீட்டில் சென்று சந்தித்தது என, ஒவ்வொரு தகவல்களும், படிக்க ஆர்வம் தருவதாக உள்ளது.

-மேஷ்பா.

நன்றி: தினமலர், 25/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *