அப்துல் கலாம்

அப்துல் கலாம், வரலொட்டி ரங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 280, விலை 200ரூ. சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை கோர்வையாக, படிக்க அலுப்பு தட்டாத வகையில், 280 பக்கங்களில் விவரித்துள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. ‘காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என்று ஒரு தலைமுறை பெருமை பேசியது என்றால், ‘நாங்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என, இன்னொரு […]

Read more

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு

உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு, அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 269, விலை 145ரூ. “ஒவ்வோர் இளைஞனுக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு லட்சியம் வேண்டும். அதை நிறைவேற்ற விடாமுயற்சியோடு கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்‘’ என்று இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாக திரும்பத் திரும்ப கூறியிருப்பது, புத்தகத்தை ஆழமாகப் படிக்கத் தூண்டுகிறது. தவிர, 2020-இல் இந்தியா ஒளிர வேண்டும் என்ற தனது கனவை மெய்ப்படுத்த விவசாயம், அறிவியல், […]

Read more

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள், அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil online: http://www.nhm.in/shop/1000000002369.html இளைய சமூகத்துக்கு கலாம் விட்டு சென்றது என்ன? முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் நூலை, அவர் மறைவுக்குப் பின் மீண்டும் படித்தேன். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலின் முன்னுரையில், தமிழக மக்களுக்கு என் பிரார்த்தனை என தலைப்பிட்டு அவர் கைப்பட எழுதியுள்ளார். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பில் அனைவரும் சமம். ஒவ்வொரு படைப்பையும் ஒரு நோக்கத்துக்காகவே […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன், அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 400, விலை 300ரூ. இந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை […]

Read more