தாக நதி

தாக நதி, ரத்தின மூர்த்தி, விஜயலட்சுமி பதிப்பகம், பக். 213, விலை 200ரூ.

வசந்தன் ஒரு விவசாயி. அவன் வெண்ணிலா என்ற பெண்ணை மணக்கிறான். ஆனால், வெண்ணிலாவோ நகரத்தில் உள்ள மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றும், அதுவும் கோட்டு சூட்டுப் போட்ட மாப்பிள்ளையாக அமைய வேண்டும் என்றும் விரும்பியவள்.

அரை குறை மனதுடன்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும் என்பதையும், இருக்கும் பொருளாதாரத்தை வைத்தே வாழ்வை நிம்மதியாகக் கழிக்க முடியும் என்பதையும் மிக வசதியாக மறந்து கொண்டிருக்கிற உலகம் இது.

தேவைக்கு அதிகமான ஆசைப்பாடுகளும், பகட்டான வாழ்க்கையுமே இவ்வுலகின் இப்போதைய கவுரவம் என்பது எழுதாச் சட்டமாகப் போய் விட்டதால் அவதிப்படுகிறோம். ஆனால், காலம் செல்லச் செல்ல கணவன் வசந்தன், விவசாயியாக வாழ்க்கை நடத்த எடுத்த முடிவு சரியே என்பதை உணர்ந்து, வெண்ணிலா, கணவனுடன் ஒத்துப் போகிறாள். இனிய இயற்கை வர்ணனைகள் நிறைந்த சிறந்த நாவல்! இனிய வாசிப்பு அனுபவம்!

-எஸ். குரு.

நன்றி: தினமலர், 6/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *