நெஞ்சில் நிறைந்த ஏ.என்.
நெஞ்சில் நிறைந்த ஏ.என்., டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக். 272, விலை 160ரூ.
சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (ஏ.என்) அவர்களின் நட்பு வட்டம் எத்துணை பெரியது? எத்தகைய சான்றோர்களுடன் அவர் பழகி இருக்கிறார்? ஓர் உற்ற நண்பனாக, உடன் பிறவாச் சகோதரனாக, சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்குபவராக, திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்குவிக்கும் ஆசானாக, எளியோர்களை வளர்த்துவிட்ட வழிகாட்டியாக என பல்வேறு ரூபங்களில், எண்ணற்ற இதயங்களில் வியாபித்திருக்கும் அவரின் வாழ்க்கைப் பயணத்தின் வரலாற்றுப் பதிவாக மலர்ந்திருக்கிறது இந்த நூல்.
அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சொற்பொழிவாளர்கள், அவருடன் பணிபுரிந்தோர், அவரோடு பழகியவர்கள், ரத்த சொந்தங்கள் என பலர் அவரைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகள் அவரைப் பற்றிய புதிய வெளிச்சத்தினை தருகின்றன.
ஏ.என். எழுதிய கட்டுரை, சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பதும், அவருடைய படைப்புகளைப் பற்றி பிறர் மதிப்புரைகளும் ஏ.என். என்ற படைப்பாளியைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
பல பிரபலங்களுடன் ஏ.என். இருக்கும் புகைப்படத் தொகுப்பு, அவரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கண்முன் கொண்டு வருகின்றன. ஏ.நடராஜனின் நினைவைப் போற்றும் இந்த நூல் அவரை அறிந்தவர்களை மட்டுமல்ல; அறியாதவர்களையும் கவர்ந்திழுக்கும்.
நன்றி: தினமணி, 27/2/3017.